அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுந்தரம், வெளிநாட்டில் சினிமா பற்றி படித்து தமிழகம் திரும்பிய பிறகு சேலத்தில் 'மார்டன் தியேட்டர்' நிறுவனத்தை தொடங்கினார். பிரமாண்ட ஸ்டூடியோ கட்டினார். அந்த ஸ்டூடியோவில் உருவான முதல் படம் 'சதி அகல்யா', இந்த படத்தில் அகல்யாவாக நடிப்பதற்கு இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட நடிகை தவமணி தேவி.
படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சுந்தர், தான் அறிமுகப்படுத்தும் தவமணி தேவி 'சதி அகல்யா'வில் நடிக்கிறார் என்று கூறிவிட்டு அவரை அறிமுகப்படுத்தினார். அவரும் ஆங்கிலத்தில் பாடல் பாடினார், ஆங்கிலத்தில் பேசினார். இறுதியாக தவமணி தேவியின் புகைப்படங்கள் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அதில் தவமணி தேவி நீச்சல் உடையில் இருந்தார்.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் தவமணி தேவி. 1941ல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர் அணிந்த, ஹவாய் நாட்டுப் பாணியிலான உடை, கவர்ச்சிக்கன்னி என்கிற பட்டத்தை அளிக்க காரணமாக அமைந்தது. சிறந்த குரல் வளம் கொண்டவர் இவர். அதனால், “சிங்களத்துக் குயில்” என அழைக்கப்பட்டார்.
'சீதா ஜனனம்' என்ற படத்தில் சீதை பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து, 'வித்யாபதி' படத்தில் 'தேவதாசி மோகனாம்பாள்' என்ற வேடத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
1947ல் வெளிவந்த 'ராஜகுமாரி' படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. 1962ம் ஆண்டில் ராமேசுவரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரை காதலித்து மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மிகத்தில் அதிக நாட்டம் செலுத்தினார். ராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் தனது 76வது வயதில் 2001ல் காலமானார்.