ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சூரி. அந்த படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி பெரிதும் பேசப்பட்டதால் அதிலிருந்த இவரை பரோட்டா சூரியாக்கி விட்டனர். ஆனால் ஆரம்பத்தில் நண்பனாகவே நடித்து வந்த சூரியின் மார்க்கெட் சமீபகாலமாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகன், மனம் கொத்திப்பறவை, ஹரிதாஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்த சூரி, தற்போது கமர்சியல் நடிகர் பட்டியலிலும் இடம் பிடித்து விட்டார்.
அதனால், மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுபவர்கள், சூரியையும் இன்னொரு ஹீரோவாக்கினால் படத்தை வியாபாரம் செய்வது எளிதாக இருக்கும் என்று அவரையும் புக் பண்ணி வருகின்றனர். அந்த வகையில், தற்போது மைனா விதார்த் நடித்து வரும் பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் சூரியும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். அதையடுத்து, விஜயசேதுபதி, இனிகோ நடிக்கும் ரம்மி படத்திலும் அவர்கள் இருவருக்கும் இணையான வேடம் சூரிக்கும் கொடுத்துள்ளார்களாம்.
ஆக, காமெடியன், குரூப் ஹீரோ என்று வளர்ந்து விட்ட பரோட்டா சூரி, அடுத்து ஷோலோ ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.