பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் 'த ராஜா சாப்'. மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
நேற்று படத்தின் நாயகன் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அது 24 மணி நேரத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. மொத்தம் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'ப்ரோ' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 5.83 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை தற்போது 'த ராஜா சாப்' முறியடித்துள்ளது. 5.1 மில்லியன் பார்வைகளைப் பெற்று இதுவரையில் இரண்டாம் இடத்தில் இருந்த அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பேய்க் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் 'த ராஜா சாப்' படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.