'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்திய நடிகராகிவிட்டார். அது மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் தெரிந்த ஒரு நடிகரும் ஆகிவிட்டார். குறிப்பாக ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறார். அதேபோல நடிகை சமந்தாவும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான். ஆனால் இத்தனை வருடங்களில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கிர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்த விட்டார் பிரபாஸ் ஆனால் சமந்தாவுடன் இணைந்து அவர் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. குறிப்பாக இந்த இரண்டு தரப்பு ரசிகர்களும் கூட இந்த ஜோடியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காததற்கு ஒரே காரணம் இருவருக்குமான உயர பிரச்சனை என்று தான் தெலுங்கு திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. பிரபாஸ் 6.2 அடி உயரமும் சமந்தா 5.2 அடி மட்டுமே உயரம் என்பதால் படத்தில் ஜோடியாக நடிக்கும் போது இந்த வித்தியாசம் தெளிவாகவே தெரியும் என்பதால் தான் சமந்தாவுடன் நடிக்காமல் ஒதுங்கி உள்ளாராம் பிரபாஸ். ஏற்கனவே அவர் நடித்த சாஹோ திரைப்படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. இந்த உயர பிரச்சனை காரணமாகத்தான் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.