இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். கலையுலக வாழ்விலும், அரசியல் வாழ்விலும், யாராலும் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக அவர் உருவாக காரணமாக இருந்தது எது? என்றால், அவரது திரைப்படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்களும், வசனங்களும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அந்த அளவிற்கு திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் நிபுணத்துவமும், அனுபவமும் பெற்றவராக, கலைத்துறை சார்ந்த ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்தி, தனது முழு ஈடுபாட்டை செலுத்தியதன் விளைவுதான், காலம் கடந்து, இன்றும் நாம் கேட்டு மகிழும் அவரது கருத்தாழமிக்க திரைப்படப் பாடல்கள். தனது கொள்கைக்கு உட்பட்டு, தன்னை பின்தொடரும் ரசிகர்களின் தனி வாழ்க்கையை மனதிற் கொண்டு, வளர்ந்து வரும் இளம் சமூத்திற்கு நன்மை பயக்கும் வண்ணம் பாடல்களைக் கேட்டுப் பெறுவதில் இவருக்கு நிகர் இவரே. அப்படி ஒரு பாடலைப் பற்றித்தான் இந்தப் பதிவில் நாம் காண இருக்கின்றோம்.
1972ம் ஆண்டு இயக்குநர் ப நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், லட்சுமி நடித்து வெளிவந்த திரைப்படம்தான் “சங்கே முழங்கு”. “ஜீபன் மிருத்யு” என்ற வங்காள மொழி திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இத்திரைப்படத்தில், நாயகன் எம்ஜிஆர், மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்லி பாடுவதாக வரும் ஒரு பாடல் காட்சி.
இந்த குறிப்பிட்ட பாடல் காட்சியின் பாடலை கவியரசர் கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைத்ததை அப்படியே தர இயலும் என்பதில் திட்டவட்டமாக இருந்தார் எம்ஜிஆர். எம் ஜி ஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு திகைத்துப் போயினர் படக்குழுவினர். மேலும் மதுவிலேயே வாழ்ந்து வரும் கண்ணதாசனைக் கொண்டு மதுவினால் விளையும் தீமைகளை எழுதச் சொன்னால் எப்படி சாத்தியப்படும்? ஏன்ற கேள்விக் கனைகளோடு, எம்ஜிஆரின் வார்த்தைக்கு மறு வார்த்தையின்றி படக்குழுவினர் கண்ணதாசனை சந்தித்து விபரத்தைக் கூறினர்.
மதுவினால் ஒரு மனிதன் படும் அல்லல்களை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் அனுபவித்து எழுத முடியாது. ஆகையால் மதுக் கோப்பைக்குள் குடியிருக்கும் தன்னை தெரிவு செய்து இந்தப் பாடலை எழுத எம்ஜிஆர் அழைக்கின்றார் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்ட கண்ணதாசன், பலமாக சிரித்துவிட்டு பின் “சங்கே முழங்கு” படப்பிடிப்புத் தளத்திற்கு புறப்பட்டார்.
படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்ற கண்ணதாசனை எம்ஜிஆர் வரவேற்க, பாடல் எழுதத் தயாரானார் கண்ணதாசன். அப்படி அவர் எழுதிய அந்தப் பாடல்தான் “சிலர் குடிப்பது போலே நடிப்பார், சிலர் நடிப்பது போலே குடிப்பார், சிலர் பாட்டில் மயங்குவார், சிலர் பாட்டிலில் மயங்குவார்” என்ற அந்தப் பாடல். “மதுவுக்கு ஏது ரகசியம்? அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம், மதுவில் விழுந்தவன் வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்” என்றும் “அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே, நாணம் இல்லை, வெட்கம் இல்லை போதை ஏறும்போது, நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும்போது” என்று பாடலின் சரணத்தில் வந்து விழுந்த ண்ணதாசனின் வார்த்தைகளைக் கண்டு வியந்து போனார் எம் ஜி ஆர்.
பாடலின் முதல் சரணத்தில் மதுவின் தீமைகளை சொல்லிய கவியரசர், இரண்டாவது சரணத்தில் எம்ஜிஆருக்காக முற்போக்கு சிந்தனை கொண்ட கருத்துக்களை சொல்ல வேண்டும் என நினைத்து எழுதியதுதான் “புகழிலும் போதை இல்லையோ, பிள்ளை மழலையில் போதை இல்லையோ, காதலில் போதை இல்லையோ, நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ” என்றும், “மனம், மதி, அறம், நெறி தரும் சுகம் மது தருமோ? நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு, நிம்மதியைத் தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு” என்று எழுதித் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் கண்ணதாசன்.
இந்தப் பாடலை எழுத நான் ஏன் கவிஞரை அழைத்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்பது போல் படக்குழுவினரை எம்ஜிஆர் பார்க்க, யாரிடம் எதை எப்படி கேட்டுப் பெற வேண்டும் என்ற வித்தை அறிந்த எம்ஜிஆரையும், எந்தச் சூழலுக்கும் பாடல் எழுதும் வல்லமை பெற்ற கவிஞரையும் கண்டு அன்று வியந்துதான் போயிருப்பர் படக்குழுவினர்.