ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் கடந்த பல வருடங்களாக மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை விட அதிகம் சர்ச்சையான விஷயங்களில் அடிபடுவதன் மூலம் தொடர்ந்து இவர் பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். குறிப்பாக பின்னணி பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்து வேறுபாடு காரணமாக 2016ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை இருக்கிறது.
அதன் பிறகு கடந்த 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. ஆனால் இவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலா தற்போது அவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அது மட்டுமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது முன்னாள் மனைவி அமருதா சுரேஷ் மற்றும் மகள் அவந்திகா பற்றி சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தார் பாலா. இதனை தொடர்ந்து அம்ருதா சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுதலையானார்.
அந்த சமயத்தில் அவர் அம்ருதா சுரேஷை திருமணம் செய்வதற்கு முன்பாகவே கடந்த 2008ல் கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவா என்பவரை திருமணம் செய்திருந்தார் என்கிற திருமண சான்றிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக அம்ருதா சுரேசும் பாலா தனது திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டையும் ஒரு முறை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா, தனக்கு பல பக்கங்களில் இருந்தும் மிரட்டல் வருவதாகவும் தன்னுடைய வீட்டிற்கு அதிகாலை 3:30 மணிக்கு இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து காலிங் பெல் கூட அடிக்காமல் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததாகவும் கூறி அது குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டார். மேலும் தன்னை சிலர் ஒரு வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தன்னுடைய 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தான் மீண்டும் திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் முறையாக திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ போவதாகவும் கூறியுள்ளார் பாலா. அந்த வகையில் பாலா திருமணம் செய்து கொண்டால் அது அவரது நான்காவது திருமணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோகிலா என்கிற தனது முறைப்பெண்ணுக்கு அவரது பிறந்த நாளன்று தான் கேக் ஊட்டி விட்ட வீடியோவையும் பிரியாணி ஊட்டிவிட்ட வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் பாலா. ஒருவேளை அவரைத்தான் இவர் திருமணம் செய்யப் போகிறாரோ என்கிற யூகங்களும் தற்போது எழுந்துள்ளன. அந்த வகையில் இத்தனை வருட கால சினிமாவை கணக்கில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் அதிகம் முறை திருமணம் செய்த நடிகர் என்கிற சாதனையை நடிகர் பாலா தனக்கு சொந்தம் ஆக்கிக் கொள்வார் என்றே தெரிகிறது.