செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
செல்லஸ் பேட்டி நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட கேப்ரில்லா செல்லஸ் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். அதன்பின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சுந்தரி சீரியலின் மூலம் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த தொடரின் மூலம் இன்று தமிழகத்தில் பல வீடுகளில் மகளாக, சகோதரியாக, பேத்தியாக கொண்டாடப்படுகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே தனது அம்மாச்சி தான் என்று கூறியுள்ளார். தனது அம்மாச்சி அதிகம் சீரியல் பார்ப்பவர் என்பதால் தன்னை சீரியலில் நடிக்க சொல்லியதாகவும், அந்த சமயத்தில் சரியாக சுந்தரி சீரியல் வாய்ப்பு வந்ததால் உடனடியாக ஓகே சொல்லி கமிட்டாகிவிட்டதாகவும் அந்த பேட்டியில் கேப்ரில்லா கூறியுள்ளார்.