கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? |
ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைக்கா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து வெளிவந்த 'கோல்டன் ஸ்பாரோ' எனும் முதல் பாடல் ஆக., 30ல் யு-டியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது இந்தபாடல் நான்கு கோடி பார்வையாளர்களைக் கடந்ததாக அறிவித்துள்ளனர். இந்த பாடல் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. அறிவு எழுதிய இப்பாடலை சுபலாஷ்னி, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.