போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

அஜித் மிகப்பெரிய கார் ரேசர் என்பது அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகள் அதிலிருந்து விலகி பைக் ரேஸ், பைக் பயணம், குட்டி விமானம் தயாரிப்பு என வேறு பணிகளில் இறங்கினாலும் மீண்டும் கார் ரேசை கையில் எடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேசும் கார் ரேசில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அபுதாபியில் கார் ரேஸ் பயிற்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு “அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக அவர் கார் பந்தயத்துக்கான பயிற்சிகள் எடுத்து, சில மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதையடுத்து இந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் பெற்றிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, பேபி ஜான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.