அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக கூறினர்.
இந்த படத்திற்காக மகேஷ் பாபு இதுவரை தோன்றாத தோற்றத்தில் தலையில் நீளமான முடி மற்றும் முகத்தில் அடர்த்தியான தாடியை வளர்த்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.