பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் | மீண்டும் சின்னத்திரைக்கு யூடர்ன் அடித்த அபிராமி வெங்கடாசலம் | அலுவலகத்தில் நகை திருடிய உதவி இயக்குனர் : மன்னித்த பார்த்திபன் | 50 லட்சம் கேட்டு ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் | பிளாஷ்பேக் : படத்தின் வெற்றிக்காக 520 கிலோ மீட்டர் பாதயாத்திரை செய்த இயக்குனர் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவின் முதல் நடன நடிகை | அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் |
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு எந்தத் துறை பாதிக்கப்பட்டதோ இல்லையோ, சினிமாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த 2020ம் ஆண்டில் ஒடிடி தளங்களுக்கு திடீரென ஒரு வரவேற்பு கிடைத்தது. கொரோனா பாதிப்பால் தியேட்டர்களை மூடியதால், பொழுதுபோக்கிற்காக ஓடிடி பக்கம் போனார்கள் மக்கள். அதனால், பல படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாகவே வெளியானது.
தியேட்டர்களில் வெளியான பின்னும் அப்படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல விலையும் கிடைத்தது. ஆனால், தற்போது ஓடிடி நிறுவனங்கள் பல படங்களை வாங்க முன்வருவதில்லை என தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளார்களாம். முன்னணி நடிகர்களின் படங்கள், மற்றும் தியேட்டர்களில் வசூலைக் குவிக்கும் படங்களை மட்டுமே அவர்கள் வாங்குகிறார்களாம். மற்ற படங்களை அவர்கள் சீண்டுவதேயில்லையாம்.
ஓடிடி தளங்களின் நிலைமை இப்படியிருக்க, சாட்டிலைட் டிவிக்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான விலையும் மிகவும் குறைந்துவிட்டதாம். ஓடிடியில் வெளியான படங்களை டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் பார்ப்பதில்லை, அதனால், விளம்பரங்களும் கிடைப்பதில்லை என டிவிக்காரர்கள் புலம்புகிறார்களாம்.
ஒரு காலத்தில் சாட்டிலைட் உரிமை மூலம் நல்ல வருவாய் கிடைத்த தயாரிப்பாளர்களுக்கு, கடந்த சில வருடங்கள் மூலம் ஓடிடி தளங்கள் மூலமும் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது அவையிரண்டுமே குறைந்து வருவதால் தியேட்டர் வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறார்களாம்.
தியேட்டர்களிலும் சிறிய படங்களுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்லி அதற்கும் காட்சிகளைத் தர மறுக்கிறார்களாம். தமிழ் சினிமாவின் இப்படியான சூழல் மாறுமா அல்லது இப்படியே நீடிக்குமா என்ற கவலையில் பல தமிழ் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று வேதனையுடன் சொல்கிறார்கள்.