சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
ராஜ்குமார் ராவ், திரிப்தி டிமிரி நடிப்பில் உருவாகி உள்ள ஹிந்தி படம் ‛விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ'. கணவன் - மனைவியை மையப்படுத்தி கலகலப்பான குடும்ப காமெடி படமாக உருவாகி உள்ளது. ராஜ் சாண்டில்யா இயக்க, விஜய் ராஸ், மல்லிகா ஷெராவத், முகேஷ் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்., 11ல் படம் ரிலீஸாகிறது.
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ராஜ்குமார் ராவ், திரிப்தி டிமிரி கலந்து கொண்டனர். படத்தில் ராஜ்குமார் ராவ் மெஹிந்தி கலைஞராகவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். அதனால் நேற்றைய புரொமோஷன் நிகழ்வில் திரிப்தி டிமிரிக்கு மெஹந்தி போட்டுவிட்டும், ஆடிப்பாடியும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.
கடந்த ஆகஸ்ட்டில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் கொடுத்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் ராஜ்குமார் ராவ்.