எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
இன்றைய இளம் தலைமுறையினருக்கு எம்.ஆர்.ராதாவை தெரிந்த அளவிற்கு எம்.கே.ராதாவை தெரியாது. எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள் காமெடியனாகவும், எம்.ஜி.ஆர் சிறு சிறு வேடங்களிலும், சிவாஜி வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோதும் பிரமாண்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் எம்.கே.ராதா.
1909ம் ஆண்டு பிறந்தவர். பிறப்பே நாடக குடும்பம். அவரது தந்தை சொந்த நாடக கம்பெனி நடத்தி வந்தார். அந்த நாடகங்களில் எம்.கே.ராதா நடித்து வந்தார். இவரது நாடக கம்பெனியின் எடுபிடியாகவும், சிறு சிறு வேடங்களிலும் நடித்தவர்தான் எம்.ஜி.ஆர். தனது தம்பி போல எம்.ஜி.ஆரை வளர்த்தவர் எம்.கே.ராதா. கடைசி காலம் வரை ராதாவை எம்.ஜி.ஆர் 'அண்ணன்' என்றே அழைப்பார்.
1936ம் ஆண்டு, எஸ்.எஸ்.வாசன் எழுதிய "சதிலீலாவதி" திரைப்படமாகியது. அதன் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அவருக்கும் அதுதான் முதல் படம். பின்னர் மாயாமச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" தவமணி தேவியுடன் "வனமோகினி"யில் நடித்தார். ஜெமினி ஸ்டூடியோவை வாசன் தொடங்கியபோது அந்த நிறுவனத்தின் நிரந்தர நடிகரானார். ராதா பெற்ற மாத சம்பளம் 2 ஆயிரம். ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார்.
1948ம் ஆண்டு ஜெமினியின் பிரமாண்ட படமான 'சந்திரலேகா' படத்தில் கதாநாயகனாக ராதா நடித்தார். சந்திரலேகா மகத்தான வெற்றி பெற்று, ராதாவுக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்தது. பின்னர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட "சந்திரலேகா"விலும் ராதாதான் கதாநாயகன். பின்னர் ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் நடித்தார். இதில், ராதாவுக்கு இரட்டை வேடம் "அவ்வையார்" படத்தில் பாரிமன்னனாக நடித்தார்.
எம்.கே.ராதா 50 படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை சரித்திர படங்கள். பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே ஹீரோவாக முடியும் என்ற காலத்தில் முதன் முறையாக பாடத் தெரியாத எம்.கே.ராதா பெரிய ஹீரோவாக வலம் வந்தார். தமிழ் சினிமாவின் முதல் மாஸ் ஹீரோ என்றும் எம்.கே.ராதாவை சினிமா வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.