பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
மலையாள நடிகர் விநாயகன் ஏற்கனவே தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் கடந்த வருடம் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவரது வர்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவரது குணாதிசயங்களாலும் பிரச்னைக்குரிய செயல்பாடுகளாலும் பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் விநாயகன். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லனாக முக்கிய வேடத்தில் இருக்கிறார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி.
அது மட்டுமல்ல இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மம்முட்டியும் இந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விநாயகனும் அவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.