ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஒவ்வொரு வருடமும் கடைசி மூன்று மாதங்களில் நிறைய படங்கள் வெளியாகும். தீபாவளி பண்டிகை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் போது அதற்கு முன்பும் பின்பும் அதிகப் படங்கள் வெளியாகும்.
இந்த வருடம் சில பெரிய படங்கள் கடைசி மூன்று மாதங்களில் வெளியாக உள்ளது. 'வேட்டையன், கங்குவா, விடுதலை 2' ஆகிய தமிழ்ப் படங்களும் 'புஷ்பா 2' டப்பிங் படமும் வெளியாகும் போது அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஓரிரு வாரங்களுக்கு வேறு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை.
'வேட்டையன்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதனால், இந்த வாரம் சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. “அப்பு, ஆரகன், செல்லக்குட்டி, நீல நிறச் சூரியன், ஒரே பேச்சு ஒரே முடிவு, சீரன், வேட்டைக்காரி” ஆகிய படங்கள் இந்த வாரம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளன. சிறிய படங்கள் நன்றாக இருந்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற வாய்ப்புகள் உண்டு. அப்படி இந்த வாரம் வரவேற்பைப் பெறும் அளவிற்கு எந்தப் படம் இருக்கப் போகிறது?.