மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் திருநங்கைகளை கிண்டல் செய்து படம் எடுத்து வந்தார்கள். காலப்போக்கில் அந்த நிலை மாறி திருநங்ககைளுக்கு கவுரமான இடம் தரப்பட்டது. பலர் சினிமாவில் முக்கியமான கேரக்டரில் நடித்தார்கள். கல்கி என்ற திருநங்கை தற்போது பிசியான நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் 'நீல நிறச் சூரியன்'. இப்படத்தில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை அமைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, விருதுகளை பெற்ற இந்த படத்தை பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் வெளியாகிறது.
படம் பற்றி சம்யுக்தா விஜயன் கூறும்போது “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்த விதமான நாடகத்தன்மையும் இல்லாமல் சொல்லும் படம் இது” என்கிறார்.