வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு |
1950களில் திராவிட இயக்கத் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது சீர்திருத்த திருமணம். இதற்கு கடும் எதிர்ப்பும் இருந்தது. இந்த காலகட்டத்தில் சீர்திருத்த திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்'. ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, டாம் எவல் நடித்த 'தி செவன் இயர் இட்ச்' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படம்.
இந்த படத்தை தயாரிக்க அப்போதிருந்த பல ஸ்டூடியோக்கள் முன்வராதபோது இயக்குனர் கே.வி.ரெட்டி. ஜெயந்தி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தானே தயாரித்து, இயக்கினார். தமிழில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'பெல்லினாட்டி பிரமனாலு' என்ற பெயரிலும் தயாரானது. தெலுங்கில் பெரிய வெற்றியும், தமிழில் சுமாரான வெற்றியும் பெற்றது.
நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். ஜமுனா, நாயகி. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர். பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கண்டசாலா இசையமைத்த இந்த படத்துக்குப் பாடல்களை, தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த படம் பேசியது.