'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது கிரிக்கெட்டை மையமாக கொண்ட படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. பெரும்பாலான படங்கள் அனைத்துமே இரண்டு தரப்பிற்கான கிரிக்கெட் போட்டி மோதல் என்பது போன்று தான் இதுவரை சொல்லி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம், கிரிக்கெட் களத்தில் வேறு விதமாக சுவாரசியமாக கதை சொல்லி இருந்தது. படம் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் லப்பர் பந்து படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அஸ்வின் கூறும்போது, “திரைப்படம் எடுப்பது என்பது உண்மையிலேயே ஒரு சீரியசான வியாபாரம் மட்டுமல்ல.. அதில் அதிகப்படியான கடின உழைப்பும் படைப்புத்தன்மையும் சேர்ந்திருக்கிறது. அதனால் தான் நான் எப்போதும் அதில் உள்ள பாசிட்டிவ் விஷயங்களையே அதிகம் பார்ப்பதுடன் நெகட்டிவ்வான விஷயங்கள் குறித்து ரொம்பவே குறைவாகத்தான் பேசுவேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு இன்று ஒரு படத்தை பார்த்துவிட்டு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.
கிரிக்கெட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அவ்வப்போது படங்கள் வந்தாலும் கூட அவை பெரும்பாலும் மையக் கருவிலிருந்து விலகி அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதை மட்டுமே சொல்லி வந்தனர். அந்த வகையில் இந்த ரப்பர் பந்து படம் வித்தியாசப்பட்டு என்னை அம்பு போல தாக்கி உள்ளது. அவ்வளவு நம்பகத்தன்மை, அவ்வளவு உண்மை.. ஒரு கதாபாத்திரம் கூட இந்த படத்தில் தேவையில்லாமல் சேர்க்கப்படவில்லை. இயக்குனர் மற்றும் அவரது மொத்த குழுவிடம் இருந்தும் புத்திசாலித்தனம் மட்டுமே வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட், பாலா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் அஸ்வின்.