இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சில வருடங்களுக்கு முன்பே 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் தனது இரண்டாவது படமாக 'ராயன்' படத்தை இயக்கி நடித்து சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது படமாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்கிற படத்தில் இயக்க உள்ளார். அதேசமயம் நான்காவது படத்தையும் அவர் முடிவு செய்துவிட்டார். படத்திற்கு 'இட்லி கடை' என டைட்டில் வைக்கப்பட்டு அது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் போஸ்டருடன் வெளியானது. சில நாட்களாக இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக அசோக் செல்வன் தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “தனுஷ் சாரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடைய தீவிர ரசிகனும் கூட. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இட்லி கடையில் நான் ஒரு பாகமாக இல்லை என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.