இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது படங்களில் காமெடியன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த மிஸ்டர். ஸூ கீப்பர் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் இவர் நடித்த முதல் வலைதொடரான கோலி சோடா ரைஸிங் இணையத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், புகழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்த மகிழ்வான தருணத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ், 'ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்' என்று பதிவிட்டுள்ளார்.