லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய வெப் தொடரில் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு 'முத்து என்கிற காட்டான்' எனும் தலைப்பு வைத்துள்ளனர். இது கிராமத்து பின்னனியில் உருவாகும் பெரிய பட்ஜெட் வெப் தொடர் என்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், நடிகர் யோகி பாபு குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்கிறார்கள். ஜாக்கி ஷெராப் ஏற்கனவே தமிழில் ஆரண்ய காண்டம், பிகில் ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.