சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'தேவரா'. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். கொரட்டலா சிவா இயக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா நேற்று நடந்தது.
இதில் ஜான்வி கபூர் பேசியதாவது : சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் (ஸ்ரீதேவி) இருந்த பல நினைவுகள் இருக்கு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். தேவரா எனக்கு ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர் பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். சென்னையில்தான் நான் குச்சுப்புடி நடனம் கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. தேவரா எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதாக அமையும். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்.
சினிமாவை கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்று பிரித்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே சினிமாதான். எனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. குறிப்பாக வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தெலுங்கில் டப் பண்ணலாம். அது நடக்கும் என்று நம்புகிறேன் என்றார்.