ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியிலிருந்து சில குறிப்பிட்ட தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் மரியாதை
இன்று ஈ.வெ.ரா.,வின் பிறந்தநாள் என்பதால் அவரது நினைவிடம் சென்றும் விஜய் மரியாதை செலுத்தினார். அரசியல் களத்தில் இறங்கியதாக அறிவித்த நாள் முதல், நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் மட்டுமே தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் இன்று எழும்பூரில் உள்ள ஈவெரா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவங்கிய பின் பொதுவெளியில் மரியாதை செலுத்துவது இதுவே முதன்முறை.
ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.




