'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2024ம் வருடத்தின் பிற்பாதியில்தான் சில முக்கியமான படங்கள் வர திட்டமிடப்பட்டது. அதே சமயம் பல மீடியம் பட்ஜெட் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகி வருகிறது. அந்தப் படங்களின் வெளியீடுகளுக்கு சரியான திட்டமிடல் இல்லை. ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால் அவற்றிற்கு சரியான தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
தயாரிப்பாளர்களுக்கென நான்கு சங்கங்கள் தமிழ்த் திரையுலகத்தில் இருந்தாலும் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முறைப்படுத்துவது சரியாக நடக்கவில்லை என பல தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான செப்டம்பர் 20ம் தேதி, “தோனிமா, கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், சட்டம் என் கையில், கோழிப்பண்ணை செல்லதுரை, தோழர் சேகுவேரா, தி கன்பெஷன்” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியானதால் அதற்கு முன்பும், பின்புமாக ஒரு வாரம் படங்கள் சரியாக வெளியாகவில்லை. அடுத்த மாதம் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படம் வெளிவரும் போதும் அப்படியேதான் நடக்கும்.