ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மிஸ்டர் எக்ஸ் என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரின் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த வேடத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் . ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் வேட்டையன் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினி - மஞ்சுவாரியர் ஆடி, பாடிய மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.