டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படம் 'வணங்கான்'. இத்தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறி ஆரஞ்ச் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ் காமாட்சி, பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2022ம் ஆண்டு முதல் இத்தலைப்பில் படம் உருவாகி வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதி, தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து சரவணன் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் வழக்கைத் தவிர்க்க தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின்னர் அவர்கள் பின்வாங்கியதால் வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மேல்முறையீட்டு மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.