'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பைக் பிரியர் மற்றும் கார் ரேஸரான அஜித் சில மாதங்களுக்கு முன் விடாமுயற்சி படத்தை அஜர்பைஜானில் முடித்துவிட்டு அங்கிருந்தபடி துபாய் சென்று அங்கு பல்வேறு விதமான கார்களில் ரேஸில் பயணித்தார். அதோடு கடந்த ஜூலை மாதம் 9 கோடி மதிப்பில் பெரராரி உயர் ரக கார் ஒன்றையும் வாங்கினார். இப்போது போர்ஷே ஜிடி 3 ரக காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.4 கோடியாம். போர்ஷே கார் உடன் அஜித் இருக்கும் போட்டோவை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து விலையுர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை அஜித் வாங்கி இருப்பதை பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.