'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : இது தமிழில் ஓடாது... - பாசிலின் கதையை ஓரங்கட்டிய இளையராஜா | நடிகர் மோகன் பாபு தலைமறைவா...? | அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின், இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கு திரையுலகம் | ரஜினியின் நன்றிக் கடிதம் : கமல்ஹாசன் ரசிகர்கள் கோபம் |
கன்னட நடிகையான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின் கர்நாடக அரசியலில் இறங்கினார். 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இவர் திருமணம் செய்ய போவதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அப்படித்தான் சில தினங்களாக தொழிலதிபர் ஒருவருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்தி பரவியது. இதற்கு இன்ஸ்டாவில், ‛‛ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துவிட்டது. எத்தனை முறை என கணக்கு வைக்கவில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் நானே முறைப்படி அறிவிப்பேன். அதுவரை ஆதாரமற்ற செய்திகள் பரப்புவதையும், வதந்திகளையும் நிறுத்துங்கள்'' என கோபமாக பதிவிட்டுள்ளார்.