சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தையும் தாண்டி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக ஹிந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர், கடந்த 2021ல் ஹங்கமா-2 என்கிற படத்தை இயக்கியிருந்தார்.
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நுழையும் அவர் மீண்டும் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அக்ஷய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பூத் பங்களா' என டைட்டில் வைக்கப்பட்டு இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 வருடங்கள் கழித்து இயக்குனர் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாக அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 'பாஹம் பாக் ஹேரா பெரி, கரம் மசாலா' என பிரியதர்ஷனுடன் இணைந்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார், கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் 'கட்டா மீத்தா' என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போதைய இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த பூத் பங்களா திரைப்படம் ஒரு ஹாரர் பேண்டஸி திரில்லராக உருவாக இருக்கிறது.