''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விக்ரவாண்டியில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கொடுத்ததை அடுத்து, 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீடியாக்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் ஐந்தாயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் வீதம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்த மாநாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டை விஜய் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.