சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் | மறுபரிசீலனை செய்யும் விஜய் ஆண்டனி | யாத்திசை இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | கண்ணப்பா படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார் |
கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்திருக்கும் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முதல் இரண்டு படங்களில் நடித்த போது பெரிதாக ரசிகர்களுக்கு பரீட்சயம் இல்லாமல் இருந்து வந்த மீனாட்சி சவுத்ரி, விஜய்யின் கோட் படத்தில் ஒப்பந்தம் ஆனதில் இருந்து பரபரப்பு வளையத்துக் வந்து விட்டார். அதை அடுத்து அவரது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாக தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று விஜய்யுடன் அவர் நடித்துள்ள கோட் படம் திரைக்கு வந்ததை அடுத்து, சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து அவர் படம் பார்த்துள்ளார். என்றாலும் ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க, தனது முகத்தில் மாஸ்க் அணிந்து தியேட்டருக்கு சென்றுள்ளார் மீனாட்சி சவுத்ரி. வெற்றி தியேட்டருக்கு தான் சென்றபோது எடுத்த வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் .