செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பெங்காலி படங்களில் நடித்து அங்கிருந்து தமிழுக்கு வந்தவர் மேகாலி மீனாட்சி. ஜித்தன் 2, அப்பத்தா, ஸ்கெட்ச், ஆருத்ரா படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார். அவர் முழுமையான ஹீரோயினாக அறிமுகமாகும் படம் 'இறுதிமுயற்சி'.
இந்த படத்தை பார்த்திபன் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார். விட்டல் ராவ் கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார். சூர்யா காந்தி ஒளிப்பதிவு செய்கிறார், சுனில் லாசர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் வெங்கட் ஜனா கூறும்போது “சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்னையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் படம் உருவாகியுள்ளது” என்றார்.