கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்' . அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். போலி என்கவுன்டர் தொடர்பான கதையில் இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி போலீசாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதை யொட்டி இதன் டப்பிங் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜினி டப்பிங் ஸ்டுடியோவில் வசனம் பேசும் வீடியோவை வெளியிட்டனர். வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிக்களுக்காக கூலி படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் இடைவெளி விட்டு வந்துள்ளார் ரஜினி.