குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும்.
'தி கோட்' படத்திற்கு அப்படி அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், இதுவரையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது தகவலாக உள்ளது. இன்று மதியத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் காலை 10 மணிக்கு மேல்தான் காட்சிகள் ஆரம்பமாக வாய்ப்புள்ளது.
'தி கோட்' படத்தின் நீளம் 3 மணி நேரம். பல தியேட்டர்களில் காலை 10 மணிக்கு இப்போது முன்பதிவு செய்துள்ளார்கள். அரசு அனுமதி 9 மணிக்கு வழங்கப்பட்டாலும் ஏற்கெனவே முன்பதிவு செய்த காட்சி நேரங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்கும். சில தியேட்டர்களில் மட்டும் 12 மணிக்கு மேல் முதல் காட்சிக்கான முன்பதிவு நடந்திருக்கிறது. அந்தத் தியேட்டர்களில் வேண்டுமானால் காலை 9 மணி காட்சிகள் நடைபெறலாம்.
பல தியேட்டர்களில் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை 1000 ரூபாய் 1500 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது.