சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சேவல் படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமானவர், பஞ்சாப் நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து, "தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி என்று, பல படங்களில் நடித்த போதும், அந்த படங்களின் தோல்வி காரணமாக, பூனம் பாஜ்வாவை ஓரங்கட்டியது கோடம்பாக்கம். அதனால், சில மலையாள படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வாவை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒருபடத்தில் நடிக்கிறார் அவர். இதே படத்தில் த்ரிஷா, ரம்யா நம்பீசன் என, மேலும் இரண்டு நடிகைகளும் இருக்கின்றனர். இந்த படத்தில், பூனம் பாஜ்வாவுக்கு மாடலிங் பெண் கேரக்டர். வழக்கமாக, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் இல்லாமல், சவாலான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். தமிழில், "இந்த மாதிரி ஒரு என்ட்ரிக்காகத்தான் காத்திருந்தேன். இப்படத்தின் மூலம், என் மற்றொரு நடிப்பு முகம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்.