''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு மத்திய மந்திரிகள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது பவன் கல்யாணின் உறவினரான அல்லு அர்ஜூன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான அவரது நண்பருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். பவனுக்கு ஆதரவாக அல்லு அர்ஜூன் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என பவன் ஆதரவாளர்கள், ரசிகர்கள் சர்ச்சையை எழுப்பினர். பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு கூட்டணி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பெரும் வெற்றியைப் பெற்றது. இதன்பின் நடந்த பதவியேற்பு விழாவிலும் அல்லு அர்ஜூன் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையே இருந்த பனிப்போர் நீண்டு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது.
இதனிடையே, நேற்று பவன் கல்யாண் பிறந்தநாளில் எக்ஸ் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் அல்லு அர்ஜூன். அதற்கு பவன் கல்யாண் இன்னும் நன்றி தெரிவிக்கவில்லை. இருந்தாலும் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சி சார்பில் அவர்களது எக்ஸ் தளத்திலிருந்து நன்றி தெரிவித்துள்ளனர். பல சினிமா பிரபலங்களுக்கும் கட்சியின் தளத்திலிருந்துதான் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் அனுமதியுடன்தான் அந்தப் பதிவைப் போட்டிருப்பார்கள். எனவே, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.