ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நாகேஷ், குமரிமுத்து, செந்தில், டிபி கஜேந்திரன், உள்ளிட்ட பல நடிகர்கள் உருவ கேலிக்கு ஆளாகி பின்னர் அந்த உருவத்தைக் கொண்டு வெற்றி பெற்றவர்கள். இந்த வரிசையில் இவர்களுக்கு முன்னோடி டிஎஸ் பாலையா.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த பாலையாவுக்கு உடல் உயரம்தான் பெரும் பிரச்சனையானது. குறைவான உயரம் கொண்ட அவர் தான் பிறந்த கிராமத்தில் அவமானங்களையும், கிண்டல் கேலிகளையும் சந்தித்தார். இதனால் மனவேதனை அடைந்த பாலையா. எப்படியாவது எல்லோரும் பாராட்டும் ஒருவராக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தது.
6ம் வகுப்பு படிக்கும் போது அவரது ஊருக்கு வந்திருந்த சர்க்கஸுக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் கனவுலகில் நடப்பது போலிருந்தது. சர்க்கஸ் கலைஞர்களின் ஒவ்வொரு சாகஸம் முடிந்த பின்னர் ரசிகர்களின் பலத்த கரகோஷத்தையும், கைதட்டல் ஒலியையும் கேட்டார் பாலையா. இது அவரது இளம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே சர்க்கஸ் நடத்துனரிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை தருமாறு கேட்டார்.
சர்க்கஸில் சென்றால் கைதட்டலும் புகழும் கிடைக்கும் என்று நம்பிய பாலையா எப்படியாவது ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர விரும்பினார். மதுரையில் தனக்குத் தெரிந்த சர்க்கஸ் நிறுவனத்தில் சேர்த்துவிடுவதாக பாலையாவின் நண்பன் ஒருவன் சொல்லவே, சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் நண்பனுடன் மதுரைக்குச் சென்றார். ஆனால் அந்த நண்பனோ பாலையாவை ஏமாற்றிச் சென்றுவிட்டார்.
நண்பரால் ஏமாற்றப்பட்ட பாலையா என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு அங்குள்ள அரங்குகளில் நடந்த நாடகங்களை பார்க்க சென்றார். தனது சர்க்கஸ் ஆசையை விட்டு விட்டு நாடகத்தில் சேர முயற்சி செய்தார். விடாமுயற்சியின் காரணமாக பாய்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். குறுகிய காலம் பாய்ஸ் கம்பெனியிலிருந்துவிட்டு பால மோகன சபாவில் சேர்ந்தார்.
அதன் பிறகு 'சதி லீலாவதி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய அப்படத்தில் முதன் முதலாக வெள்ளித்திரையில் வில்லனாக அறிமுகமானார் பாலையா. சதி லீலாவதி அவரது திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம். காரணம் எம்ஜிஆர், எம்கே ராதா, கே.ஏ.தங்கவேலு என அனைவருக்கும் அதுவே முதல் படம். அத்தகைய முதல் படத்திலேயே நல்லதொரு பெயரைப் பெற்றார் டி.எஸ்.பாலையா.
இன்றைக்கு பரவலாக இருக்கும் காமெடி கலந்த வில்லத்தனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பாலையாதான்.