ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

ஆர்கே ட்ரீம் பேக்டரி சார்பில் ராதா கிருஷ்ணன் தயாரிக்கும் படம் "நிர்வாகம் பொறுப்பல்ல". 'பேய் இருக்க பயமேன்' திரைப்படத்தை இயக்கி நடித்த கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஶ்ரீனிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதா கிருஷ்ணன், மிருதுளா ஜெயஶ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கார்த்தீஸ்வரன் கூறும்போது, "உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக உருவாகி இருக்கிறது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
சென்னை, மும்பை, காஷ்மீர், குலுமணாலி, கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்" என்றார்.




