பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பு, ஓவியம், இலக்கியம், பேச்சாளர் என பன்முக திறமையால் திகழ்கிறவர். ஹீரோ, குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் அதில் ஜாம்பவானக தனது திறமையை நிரூபித்தவர் நடிகர் சிவகுமார். ஆனால், ஒரு காலக்கட்டத்தில் அவர் நடிப்பதையே விட்டுவிட்டார்.
அது ஏன்? என்ற கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு டிவி சீரியல்களில் அதிகம் நடித்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சம்பாதித்ததை விட சீரியலில் அதிகம் சம்பாதித்தேன். 'பாசமலர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசன் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 2 நாட்கள் தூங்காமல் சாப்பிடமால் இருந்து நடித்தார். அதுபோல நானும் நான் நடித்த சீரியலின் ஒரு காட்சிக்காக கஷ்டப்பட்டு நடித்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். நான் கோபத்துடன் உயிரைக் கொடுத்து நடிக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் 'இப்ப எதுக்கு சார் கத்துறீங்க? எப்படியும் இத டப்பிங் தான பேச போறீங்க' என அலட்சியமாக பேசினார். அன்று நான் இந்த நடிப்புக்கு மரியாதை இல்லை. இனி இந்த நடிப்பே வேண்டாம் என என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டு முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.