அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை |
'புதிய கீதை' படத்திற்குப் பிறகு சுமார் 21 வருட இடைவெளியில் விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் இசையமைப்பது 'தி கோட்' படம் மூலம் நடந்துள்ளது. இத்தனை வருட காலமாக யுவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பை இயக்குனர்களும் சரி, விஜய்யும் சரி ஏற்படுத்தித் தரவில்லை.
விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற வெங்கட் பிரபு, தனது தம்பி யுவனையே 'தி கோட்' படத்திற்கு இசையமைக்க வைத்தார். அப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலைதான் தற்போது உள்ளது.
இந்நிலையில் இன்று 'தி கோட்' படத்தின் பத்திரிகையளார் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. அதை நேற்று இரவு திடீரென ரத்து செய்தார்கள். யுவனுக்காக வெங்கட் பிரபு தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்களாம்.
நாளை மறுதினம் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நான்காவது சிங்கிளை வெளியிடலாம் என்று சொன்னார்களாம். அதை ஏற்றுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் யுவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பைத் தள்ளி வைத்து, அதையும், நான்காவது சிங்கிளையும் சேர்த்தே கொண்டாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், இன்று ரத்தான சந்திப்பு நாளை மறுதினம் நடக்கும் என்பதே லேட்டஸ்ட் அப்டேட்.