விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தனுஷ் இயக்குனராக ‛ராயன்' படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இதில் அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் ' கோல்டன் ஸ்பெரோ' விரைவில் வெளியாகிறது என அறிவித்தது. தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடலான 'கோல்டன் ஸ்பெரோ' பாடலில் கேமியோ ரோலில் நடித்த பிரியங்கா மோகனுக்கு நன்றி என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், தனுஷூடன் இணைந்து பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷ் இயக்கத்தில் ஒரு பாடலில் நடனமாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.