சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மித்ரன் ஜவகர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடிப்பில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை வென்றுள்ளார் நித்யா மேனன். படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதாலும் அப்படம் பற்றிய தனது நினைவுகளை நீண்டதொரு பதிவாக நேற்று பதிவிட்டுள்ளார்.
“திருச்சிற்றம்பலம்' படம் வெளியாகி இன்றோரு இரண்டு வருடங்கள் ஆகவிட்டன. இந்த நேரத்தில் நாங்கள் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் கொண்டாட்டத்துடன் இருக்கிறது. இந்தப் படத்திற்காக எனது முதல் தேசிய விருது. என்ன ஒரு அனுபவம்.
இதற்காக என்னை அழைத்த, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த, பேச முடியாமல் தவித்த அனைவருக்கும் நன்றி. நான் இதுவரை சந்திக்காத அனைவருக்கும், ஆனால், தங்களது இதயத்தில் என்மீது மிகுந்த அன்பு வைத்து, தூரத்தில் இருந்து என்னை ஆசீர்வதித்தவர்களுக்கு எனது நன்றிகள். ஒவ்வொருவரும் அதை தாங்களே வென்றுவிட்டதைப் போல அனுபவித்ததாக உணர்ந்தேன்.
இந்தப் படத்தை அங்கீகரித்து விருது வழங்கியதற்காக 2024 தேசிய விருதுகளின் பிராந்திய, தேசிய நடுவர்களுக்கு நன்றி. வெளியிலிருந்து பார்ப்பதற்கு எனது நடிப்பு சாதரணமாக தெரியும். ஆனால் அது எளிதல்ல, அதுவும் கஷ்டமான வேலை தான். சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர துவே முழுமை கிடையாது.
திருச்சிற்றம்பலம் படத்தைப் பொறுத்தவரையில் நம்மில் யாருக்காவது எந்த விருது கிடைத்தாலும், அது நம் நால்வருக்கும் சொந்தமானது. எனவே, இது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ் மற்றும் எனக்கானது என ஒவ்வொருக்கும் கால் பகுதி சொந்தமானது. உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். எனது வலிமை பற்றி மிகவும் குரல் கொடுத்ததற்கு நன்றி. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் இருந்து வருவது கடினம். இது போன்ற பல படங்கள் வரட்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.
நித்யா மேனனின் பதிவுக்கு நடிகர் தனுஷ் 'ஹாட்டின்' எமோஜிக்களையும், படத்தில் நடித்த மற்றொரு நடிகையான ராஷி கண்ணா, “மிகவும் தகுதியானது,” என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.