பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

விலங்கு வெப் தொடர் மூலம் நடிகர் விமல் மீண்டும் கம்பேக் தந்தார். தற்போது சில வெப் தொடர்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த வரிசையில் என்கிட்ட மோதாதே பட இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ராதாரவி, கஞ்சா கருப்பு, திவ்யா துரைசாமி, பிக்பாஸ் பாவ்னி, ஷிவின், குயின்சி, புகழ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு 'ஓம் காளி ஜெய் காளி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.




