'காந்தாரா சாப்டர் 1' நான்கு வார ஓடிடி வெளியீடு, ஏன்? | அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை |

தெலுங்கு சினிமாவில் ரசிகர்களால் 'நேச்சுரல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நானி, அந்த பட்டத்தை பிரியாங்கா மோகனுக்கு வழங்கினார். அதுபற்றிய விபரம் வருமாறு:
டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், டி.வி.வி. தனய்யா மற்றும் கல்யாண் தாசரி தயாரிக்கும் தெலுங்கு படம் 'சனிபோதா சனிவாரம்'. இந்த படம் தமிழில் 'சூர்யாஸ் சாட்டர்டே' என்ற பெயரில் வெளியாகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கி உள்ளார். நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அதிதிபாலன், பிரியங்கா மோகன், அபிராமி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். வருகிற 29ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னையில் நடந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நானி பேசியதாவது : ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். எனது படத்தை பற்றி தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். 'சூர்யா'ஸ் சாட்டர்டே' ஸ்பெஷலான திரைப்படம். இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ்.ஜே.சூர்யாதான் ஹீரோ. என்னைப் பொறுத்தவரை இது எஸ்.ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது.
பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் 'நேச்சுரல் ஸ்டார்'. அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு நானி பேசினார்.