பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
'கன்னட கானகுயில்' என்று அந்த மாநில மக்களால் இப்போதும் போற்றப்படுகிறவர் அஸ்வத்தமா. அவர் நடித்தது 3 படங்கள்தான். 1935ல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான 'சாதரமே' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
1937ம் ஆண்டில் தியாகராஜ பாகவதரின் 'சிந்தாமணி' படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு 'சாந்த சக்குபாய்' படத்தில் நடித்தார். 3 படங்களுமே வெள்ளி விழா படங்கள். 3 படங்களிலும் டைட்டில் கேரக்டரில் நடித்தார். 3 படங்கள் நடித்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பெங்களூருவில் பிறந்த அஸ்வத்தமா 1934ம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாடகி ஆனார். பிரபல ரிக்கார்டிங் நிறுவனங்கள் இவரது இசை தட்டுகளை போட்டி போட்டு வெளியிட்டன. சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவிலும் பாடினார்.
'சிந்தாமணி' படம் இலங்கையில் வெளியானபோது அதனை 100 முறைக்கு மேல் பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வத்தமாவை நேரில் சந்திக்க கள்ளத் தோணி மூலம் இந்தியா வந்து, பின்னர் பெங்களூர் சென்று அவரை சந்திக்க முடியாமலேயே கடிதம் எழுதிவைத்து விட்டு பெங்களூரு தெருவில் செத்துக் கிடந்திருக்கிறார்.