ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? |
இயக்குனர் சேரன் விதிமுறையை மீறி அதிக சத்தத்துடன் ஹாரனை ஒலிக்கவிட்டுச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் ஓட்டுனரை கண்டித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. புதுச்சேரியில் இருந்து சேரன் கடலூருக்கு தனது காரில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சேரன் பேருந்து ஓட்டுனர்களை மிரட்டினார் என்று போலீசில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் “இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.