விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் |
எதிர்பார்த்த படங்கள் எதிர்பாராத ஏமாற்றத்தைத் தருவதால் சினிமா ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. சில வாரங்கள் முன்பு வரை ஒரு புதிய படம் அதுவும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் வந்தால் முன்பதிவுகள் அமோகமாக இருக்கும். படம் வெளியான நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதற்கடுத்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் இருக்கும். டாப் நடிகர்களின் படங்களுக்கு ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவுகள் நடக்கும்.
ஆனால், சமீபத்திய பெரிய படம் ஒன்று ரசிகர்களை மிகவும் ஏமாற்றியதால் ரசிகர்களும் தற்போது 'உஷார்' ஆகிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாளை ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ள 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா' ஆகிய படங்களின் முன்பதிவுகளைப் பார்க்கும் போது அது உங்களுக்கும் புரியும். நாளை ஒரு நாளில் மட்டும் 'தங்கலான், டிமான்ட்டி காலனி 2' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்பதிவுகள் நடந்துள்ளது. அதற்கடுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மிக மிகக் குறைந்த அளவிலான முன்பதிவுகளே நடந்துள்ளன.
நாளை இப்படங்கள் வெளியான பின் படம் எப்படியிருக்கிறது என்ற கருத்துக்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்வோம் என ரசிகர்கள் தயங்குவது தெரிகிறது. படம் நன்றாக இருந்தால் தியேட்டர்கள் பக்கம் போவோம், இல்லை என்று வந்தால் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.