ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா , சூர்யா கூட்டணியில்' புறநானூறு' என்கிற படம் உருவாகுவதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். பின்னர் ஒரு சில மாதங்களில் புறநானூறு திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவருடன் இணைந்து மற்றொரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து சுதா கொங்கரா சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.