அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு நிமிட காட்சியை எனக்கே தெரியாமல் இணைத்துள்ளனர். அந்த காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படம் பாருங்கள் என விஜய் மில்டன் தெரிவித்து இருந்தார். இதனால் படக்குழு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் விஜய் மில்டன் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனி தலையீட்டால் தான் அந்த ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛அது நான் இல்லை... என குறிப்பிட்டு ‛மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை'' என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ‛‛அந்த அறிமுக காட்சியை தியேட்டர்களில் இருந்து நீக்கி விடுவது என தயாரிப்பாளரும், இயக்குனரும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர். இந்த பிரச்னை முடிந்துவிட்டது என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.