ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தற்போது விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை தயாரித்து வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட இருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் விஜய்தேவரகொண்டாவின் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் அறிவித்துள்ளது. கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி.ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதுவரை 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. தற்போது இலங்கையில் உள்ள அடர்ந்த மலை பகுதியில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.